வியட்நாமின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் ஆட்டோ (VinFast Auto), இந்தியாவில் தனது முதல் உற்பத்தி ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழாவை இன்று (25-02-2024) முக்கியமான மைல்கல் நிகழ்வாக கொண்டாடியது. இந்த விழா வின்ஃபாஸ்ட் நிறுவன செயல்பாடுகளின் உலகளாவிய விரிவாக்கத்தில், மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றத்தைக் குறிக்கிறது. மேலும், உள்நாட்டிலும் உலகெங்கிலும் பசுமை போக்குவரத்திற்கு மாற்றம் காண்பதில் வின்ஃபாஸ்ட் கொண்டிருக்கும் அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் [Thiru M. K. Stalin, Honorable Chief Minister of Tamil Nadu], தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் டாக்டர். டி.ஆர்.பி.ராஜா [Thiru Dr. T. R. B. Rajaa, Honorable Minister for Industries, Government of Tamil Nadu], மாநில தொழில் துறைச் செயலாளர் திரு. வி அருண்ராய் [Thiru V. Arun Roy IAS, Industries Secretary], தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர்கள், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில அரசின் மூத்த பிரதிநிதிகள் மற்றும் வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக பிரதிநிதிகள் குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தென் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (சிப்காட் – State Industries Promotion Corporation of Tamil Nadu (SIPCOT)) தொழிற்பேட்டையில், 400 ஏக்கர் பரப்பளவில், வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் புதிய ஒருங்கிணைந்த மின்சார வாகன ஆலை கட்டப்படும். இந்த உற்பத்தி ஆலைத் திட்டத்தின் ஆரம்ப கட்ட முதலீடு 500 மில்லியன் டாலர் (ரூ. 4,000 கோடி) ஆகும். இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
இந்த வரலாற்று மைல்கல் நிகழ்வு குறித்து வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஃபாம் சான் சாவ் (Pham Sanh Chau, CEO, VinFast India) கூறுகையில், “தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைக்கான அடிக்கல் நாட்டுவிழா இந்தியாவில் நிலைத்து நீடிக்கத்தக்க நிலையான மற்றும் பசுமை போக்குவரத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்தை தூத்துக்குடியில் அமைப்பதன் மூலம், வேலை வாய்ப்பு உருவாக்கம், பசுமைப் போக்குவரத்து மற்றும் உத்திசார் ஒத்துழைப்பு ஆகியவற்றில் வின்ஃபாஸ்ட் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பு, மின்சார வாகனத் துறையில் ஒரு மிகப்பெரும் நிறுவனமாக வின்ஃபாஸ்டின் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகிறது. இந்த மைல்கல் நிகழ்வு வியட்நாம் மற்றும் இந்தியாவின் வலுவான பொருளாதாரங்களுக்கு இடையிலான உறவுகளையும், பிணைப்புகளையும் பலப்படுத்துகிறது. மேலும் கார்பன் வெளியேற்றம் இல்லாத பூஜ்ஜிய உமிழ்வு போக்குவரத்துடன் கூடிய எதிர்காலத்திற்கான வின்ஃபாஸ்டின் அர்ப்பணிப்பை இது எடுத்துக் காட்டுகிறது. இந்த உற்பத்தி தொழிற்சாலை இந்தப் பகுதியில் பொருளாதார வளர்ச்சி, புதுமையான மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு களம் அமைக்கிறது” என்றார்.
தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா [Dr. T. R. B. Rajaa, Honourable Minister for Industries, Investment Promotion & Commerce, Government of Tamil Nadu] கூறுகையில், “இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் இந்த மாபெரும் தொடக்கம், தமிழ்நாட்டின் முற்போக்கான தொழில்துறை கொள்கைகளை மீண்டும் உறுதிப்பட எடுத்துரைக்கிறது. மேலும் உலகளாவிய வாகன புதுமைக் கண்டுபிடிப்புச் சூழலுக்கும், உற்பத்திக்கும் தமிழ்நாட்டை மிகச்சிறந்த உற்பத்தி மையம் என மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் பங்கு அமைந்திருக்கிறது. நாட்டில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் விரும்பும் லட்சிய வளர்ச்சித் திட்டங்களுக்கு ஏற்ற இடமாக தமிழ்நாடு இருக்கும். மேலும் கார்பன் வெளியேற்றம் இல்லாத பூஜ்ஜிய உமிழ்வு போக்குவரத்தை எல்லோராலும் எளிதில் பெறக்கூடிய ஒன்றாக மாற்றுவதில் தமிழ்நாடு உறுதிபூண்டுள்ளது. இந்த திட்டம் தமிழ்நாட்டு மக்களின் பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டிற்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.
இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் இந்த தொடக்கம், அதன் உலகளாவிய விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். உலகின் மூன்றாவது மிகப்பெரிய வாகன சந்தையான இந்தியாவில், மிக துரிதமாக வளர்ச்சிக்கண்டு வரும் மின்சார வாகனப் போக்குவரத்துப் பிரிவில் வேகமான வளர்ச்சியை எட்டுவதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. தூத்துக்குடியில் அமையும் இந்த ஒருங்கிணைந்த மின்சார வாகன உற்பத்தி ஆலை, ஆண்டுக்கு சுமார் 150,000 கார்களை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது பெரும் பங்களிப்பதோடு. 3,000 முதல் 3,500 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் இது வழங்கும். இந்நிறுவனம் ஆரம்பத்தில் இருந்தே உள்ளூர்மயமாக்கலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் உலக அளவில் சிறந்த விநியோகத் தளத்துடன் இணைந்து செயல்படும்.
தமிழ்நாட்டில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் முதலீடு, வியட்நாமிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான விரிவான உத்திசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்நிறுவனத்தின் உலகளாவிய எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கிறது, இந்தியாவை, தனது சர்வதேச சந்தை விரிவாக்கத்திற்கு ஒரு உந்துசக்தியாக இந்த நிறுவனம் பயன்படுத்துகிறது. வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் விழா, உள்நாட்டிலும் உலக அளவிலும் விரைவான முறையில் பசுமை போக்குவரத்து மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.
அதி நவீன உற்பத்தி ஆலையை கட்டமைப்பதோடு மட்டுமில்லாமல், ஒரு சந்தையில் வலுவான பிராண்ட் செயல்பாட்டை உருவாக்கவும், நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களை விரைவாகச் சென்றடையவும், நாடு தழுவிய விற்பனையாளர் (டீலர்ஷிப்) கட்டமைப்பை நிறுவ வின்ஃபாஸ்ட் திட்டமிட்டுள்ளது. வின்ஃபாஸ்ட் இந்திய சந்தையில் ப்ரீமியம் தரத்திலான தயாரிப்புகள், எல்லோரலும் வாங்குவதற்கு ஏற்ற போட்டித் தன்மையுடன் கூடிய விலையில் விற்பனை, விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் ஆகியவற்றை வழங்க உறுதிபூண்டுள்ளது. இது மின்சார வாகனப் போக்குவரத்தை பரவலாக சென்றடையும் தன்மை கொண்டதாக மாற்றும். மேலும் மின்சார வாகனம் என்றால் நாட்டில் மக்களுக்கு விருப்பமான மின்சார வாகன பிராண்டாக இது உருவெடுக்கும் உதவும்.