நிலையற்ற பங்குச்சந்தை – சென்செக்ஸ் 31.71 புள்ளிகள் உயர்வு

இன்றைய வர்த்தகத்தில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும், முடிவில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 31.71 புள்ளிகள் உயர்ந்து 40,625.51-இல் நிலைபெற்றது.

காலையில் நல்ல எழுச்சியுடன் துவங்கிய பங்குச்சந்தை மதியம் குறைந்த அளவை எட்டியது. பின்னர் சிறிது முன்னேற்றம் கண்டது. துவக்கத்தில் 40,592.54-இல் தொடங்கிய சென்செக்ஸ் 40786.82 வரை சென்றது, பின்னர் 40,461.97 வரை குறைந்தபட்ச அளவை எட்டியது. இறுதியில் 31.71 புள்ளிகள் (0.08 சதவீதம்) உயர்ந்து 40,625.51-இல் நிலைபெற்றது.

மும்பை பங்குச்சந்தையில் இன்று மொத்தம் 2,814 பங்குகள் வர்த்தகமானது. அதில், 1,137 பங்குகள் முன்னேற்றம் அடைந்தது. 1,513 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 164 பங்குகள் மாற்றமின்றி நிலை பெற்றன. வர்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ. 160.36 லட்சம் கோடியாக இருந்தது. வர்த்தகத்தில் 101 பங்குகள் இந்த ஆண்டில் புதிய உச்சத்தை எட்டியது, 57 பங்குகள் இந்த ஆண்டில் புதிய குறைந்த நிலையை அடைந்தது.

ஹெச் சி எல் டெக்னாலஜிஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 10 பங்குகள் ஆதாயம் பெற்றன. 20 பங்குகள் சரிவை சந்தித்தன. இதில், ஹெச் சி எல் டெக்னாலஜிஸ் 3.94 சதவீதம், கோடக் வாங்கி 2.40 சதவீதம், இன்ஃபோஸிஸ் 2.27 சதவீதம் உயர்ந்து ஆதாய பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும் ரிலையன்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், டெக் மஹிந்திரா ஆகியவை 1.22 சதவீதம் முதல் 1.95 சதவீதம் உயர்ந்தன.

டைடன் நிறுவனம் சரிவு: அதே சமயம், டைடன் நிறுவனம் 2.18 சதவீதமும், சன் பார்மா நிறுவனம் 2.07 சதவீதமும் குறைந்து வீழ்ச்சி பட்டியலில் முன்னிலை வகித்தன.

தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 3.55 புள்ளிகள் (0.03 சதவீதம்) உயர்ந்து 11,934.50-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின்போது நிஃப்டி அதிகபட்சமாக 11,988.20 வரை உயர்ந்தும், குறைந்தபட்சமாக 11,888.90 அளவையும் எட்டியது. தேசிய பங்குச்சந்தையில் இன்று மொத்தம் 1,989 பங்குகள் வர்த்தகமானது. அதில், 807 பங்குகள் முன்னேற்றம் அடைந்தது. 1,077 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 105 பங்குகள் மாற்றமின்றி நிலை பெற்றன.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *