டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டீ.சி.எஸ்) நிறுவனம் மார்ச் 31, 2020 அன்று முடிவடைந்த காலாண்டுக்கான தொகுக்கப்பட்ட நிதிநிலை முடிவுகளை அறிவித்துவுள்ளது. இந்த நிறுவனம் மார்ச் 31, 2020 ல் முடிவடைந்த காலாண்டில் செயல்பாடுகளின் மூலம் ரூபாய் 40684 கோடி மொத்த வருமானம் ஈட்டியுள்ளது, இது டிசம்பர் 31, 2019ல் முடிவடைந்த காலாண்டில் ரூ. 40672 கோடியாகவும் மார்ச் 31, 2019ல் முடிவடைந்த காலாண்டில் ரூ. 39203 கோடியாகவும் இருந்தது.
மார்ச் 31, 2020ல் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வரிக்கு பின் நிகர லாபம் ரூபாய் 8049 கோடியாக இருந்தது. இது டிசம்பர் 31, 2019ல் முடிவடைந்த காலாண்டில் ரூ. 8118 கோடியாகவும், மார்ச் 31, 2019ல் முடிவடைந்த காலாண்டில் ரூ. 8126 கோடியாக இருந்தது.
மார்ச் 31, 2020 ல் முடிவடைந்த காலாண்டில் ஒரு பங்கு விகித ஈட்டுத் தொகை (முக மதிப்பு ரூ. 1 ஒரு பங்குக்கு) ரூ. 21.49 ஆக இருந்தது. இது டிசம்பர் 31, 2019ல் முடிவடைந்த காலாண்டில் ரூ. 21.63 ஆக இருந்தது, மார்ச் 31, 2019ல் முடிவடைந்த காலாண்டில் ரூ. 21.65 ஆக இருந்தது.
இந்த நிறுவனம் மார்ச் 31, 2020 ல் முடிவடைந்த நிதி ஆண்டில் செயல்பாடுகளின் மூலம் ரூபாய் 161541 கோடி மொத்த வருமானம் ஈட்டியுள்ளது, இது மார்ச் 31, 2019ல் முடிவடைந்த நிதி ஆண்டில் ரூ. 150774 கோடியாக இருந்தது.
மார்ச் 31, 2020ல் முடிவடைந்த நிதி ஆண்டில் நிறுவனத்தின் வரிக்கு பின் நிகர லாபம் ரூபாய் 32340 கோடியாக இருந்தது. இது மார்ச் 31, 2019ல் முடிவடைந்த நிதி ஆண்டில் ரூ. 31472 கோடியாக இருந்தது.
மார்ச் 31, 2020 ல் முடிவடைந்த நிதி ஆண்டில் ஒரு பங்கு விகித ஈட்டுத் தொகை (முக மதிப்பு ரூ. 1 ஒரு பங்குக்கு) ரூ. 86.19 ஆக இருந்தது. இது மார்ச் 31, 2019ல் முடிவடைந்த நிதி ஆண்டில் ரூ. 83.05 ஆக இருந்தது.