ஐஷர் நிறுவனம் மார்ச் 2020ற்கான கனரக வாகனங்கள் மற்றும் பேருந்து விற்பனை விவரங்களை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் மார்ச் 2020ல் மொத்தமாக 1499 வாகனங்களை விற்றுள்ளது, இது மார்ச் 2019ல் 8676ஆக இருந்தது. மார்ச் 2020ன் விற்பனை சென்ற ஆண்டை விட 82.7% குறைந்துள்ளது.
2019-20 நிதி ஆண்டில் மொத்த விற்பனை 48721 ஆக இருந்தது. இது 2018-19 ஆண்டில் 72969ஆக இருந்தது.
மார்ச் 2020ல் இந்நிறுவனம் 1476 கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் விற்பனை செய்துள்ளது, இது மார்ச் 2019ல் 8545ஆக இருந்தது. இது சென்ற ஆண்டை விட 82.7% குறைவாகும்.
மார்ச் 2020ல் இந்நிறுவனம் 23 வோல்வோ கனரக வாகனங்களை விற்பனை செய்துள்ளது, இது மார்ச் 2019ல் 131ஆக இருந்தது. இது சென்ற ஆண்டை விட 82.4% குறைந்துள்ளது.
உள்நாட்டு சந்தையில் இந்நிறுவனம் 1409 வாகனங்களை மார்ச் 2020ல் விற்றுள்ளது, இது சென்ற ஆண்டு விற்பனையை விட 80.8% குறைந்துள்ளது. மார்ச் 2019ல் உள்நாட்டு வாகன விற்பனை 7329 ஆக இருந்தது.
மார்ச் 2020ல் இந்நிறுவனம் 67 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது, இது மார்ச் 2019ல் 1216ஆக இருந்தது. இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட 94.5% குறைந்துள்ளது.