என் டி பி சி நிறுவனம் 660 மெகா வாட் திறன் கொண்ட கார்கோனே அனல் மின் நிலையத்தின் இரண்டாவது அலகை திறந்தது. சோதனை செயல்பாட்டிற்கு பிறகு இந்த நிலையத்தின் மின்சார அளவு நிறுவனத்தின் நிறுவப்பட்ட திறனில் சேர்க்கப்பட்டது.
கார்கோனே அனல் மின் நிலையத்தின் நிறுவப்பட்ட திறனின் அளவு இரண்டாம் அலகுடன் சேர்த்து 1320 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் நிறுவப்பட்ட திறனின் அளவு 50355 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது. என் டி பி சி குழுமத்தின் நிறுவப்பட்ட திறனின் அளவு 58816 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.