ஏஷியானா ஹவுசிங் நிறுவனம் மார்ச் 12, 2020 அன்று “ஏஷியானா அமந்த்ரன்” குடியிருப்பு திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஆர்வத்தை பதிவு செய்ய தொடங்கியது. இந்த குடியிருப்பு திட்டத்தில் மொத்தம் விற்பனை அளவு 8,14,320 சதுர அடி ஆகும்.
இத்திட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக 240 வீடுகள் (4,27,200 சதுர அடி) விற்பனைக்கு உள்ளது. இதில் நிறுவனம், 125 வீடுகளுக்கு (2,18,765 சதுர அடி) இறுதி முன்பதிவாக மாற்று கோரிக்கைகள் பெற்றுள்ளது. இவற்றுள், 73 வீடுகளுக்கு ஆவணங்கள் மற்றும் கணினியில் பதிவேற்றம் முடிந்துள்ளது. மீதம் உள்ள 52 உள்ள வீடுகளுக்கு கொரோனா தொற்று குறைந்து இயல்பு நிலை வந்தவுடன் ஆவணங்கள் மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்ய முடிவு செய்துள்ளது.