குஜராத்தின் வள்சத் மாவட்டத்தின் ஆட்சியரின் ஆணைக்கிணங்க ஜி ஹெச் சி எல் நிறுவனம் வீட்டு ஜவுளி பிரிவின் வபியில் உள்ள ஆலையை மூடியது. மாவட்ட ஆட்சியர் வள்சத் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில்துறை நடவடிக்கைகள் அனைத்தையும் தற்காலிகமாக மார்ச் 29, 2020 வரை மூட உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஊழியர்களின் உடல்நலத்தினை மற்றும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, ஜி ஹெச் சி எல் நிறுவனத்தின் மேலாண்மை குழு வீட்டு ஜவுளி பிரிவின் வபி ஆலையை மார்ச் 29, 2020 வரை மூடியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஊழியர்கள் வீட்டிலேயே இருக்க நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. தொழிற்சாலை மீண்டும் மார்ச் 30, 2020ல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.