ராமகிருஷ்ணா போர்ஜிங்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு சந்திப்பில், ரூ. 40 கோடி வரை நிறுவனத்தின் பங்குகளை திரும்ப வாங்க ஒப்புதல் அளித்துள்ளது. நிறுவனம் பங்குச்சந்தை வாயிலாக ஒரு பங்கு ரூ. 250 வரை வாங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தில் ஒப்புதல் அளித்த அளவு வரை நிறுவனம் 16,00,000 பங்குகளை திரும்ப வாங்கலாம். இது நிறுவனத்தின் செலுத்தப்பட்ட மூலதனத்தில் 4.81% ஆகும். சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைவாக இருந்தால் பங்குகளின் அளவு அதிகமாகும், ஆனால் அது நிறுவனத்தின் பங்குகளில் 25 சதவீதத்திற்கு மேல் இருக்காது.