கரூர் வைஸ்யா வங்கி “என் காசு” என்ற முன் செலுத்திய பணப்பை அட்டையை கரூரில் வெளியிட்டது. அரசாங்கத்தின் டிஜிட்டல் முயற்சியின் அங்கமாக கரூரில் பண பயன்பாட்டை குரைப்பதற்காக இந்த அட்டையை வெளியிட்டுள்ளது.
டெபிட் அட்டை மற்றும் கடன் அட்டை இருந்தும் மக்கள் பண உபயோகத்தை குறைக்கவில்லை. அட்டைகளை உபயோகிக்க குறைந்தபட்ச பரிவர்த்தனை தொகை ஒரு பெரிய தடையாக இருக்கிறது. இந்த பிரச்சனையை சரிக்கட்ட கரூர் வைஸ்யா வங்கி “என் காசு” அட்டையை வெளியிட்டுள்ளது.
என் காசு அட்டைகள் கடைகளிலும், இணையத்திலும் உபயோகிக்கலாம். இந்த அட்டையை மொபைல் ஆப், மற்றும், யு பி ஐ, வங்கி கிளைகள் மற்றும் என் ஈ எப் டி வாயிலாக பணம் நிரப்பலாம்.