கரூர் வைஸ்யா வங்கி இன்று கோயம்பத்தூரில் மையப்படுத்தப்பட்ட செயல்பாடுகள் மையத்தை துவங்கியது.
கடந்த சில வருடங்களாகவே வாங்கி அதன் செயல்பாடுகளை மையப்படுத்தி வந்தது. இதன் மூலம் வங்கி கிளைகளில் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த நினைத்தது. இம்மையத்தினால் பல இடங்களில் இயங்கி வந்த வங்கியின் செயல்பாடுகள் ஒரே இடத்திற்கு வந்துள்ளது, இது வங்கியின் செயல்திறனை மேம்படுத்தும்.
இந்த மையம் கோயம்புத்தூரில் உள்ள ஹனுதேவ் இன்போ பார்க் வளாகத்தில் அமைந்துள்ளது. இதன் விலாசம், ஹனுதேவ் இன்போ பார்க், நவ இந்தியா, உடையம்பாளையம் சாலை, கோயம்புத்தூர் – 641028.