பெரி ஆர்டிகுலர் எனப்படும் மூட்டுகளில் ஏற்படும் எலும்பு முறிவுகளுக்கு ஒரு திறமையான மருத்துவரால் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்பட வேண்டியது மூட்டின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு அவசியமான ஒன்றாகும்
ஒரு நபரின் மூட்டுகளிலும் அதைச் சுற்றியும் பெரி ஆர்டிகுலர் எலும்பு (Periarticular fractures) முறிவுகள் ஏற்படுகின்றன. இந்த எலும்பு முறிவுகளுக்கு இதற்கென உள்ள ஒரு சிறப்பு மருத்துவமனை அமைப்பில் ஒரு திறமையான மருத்துவரால் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படுவது கட்டாயமாகும். அவ்வாறு செய்யாவிட்டால் நோயாளியின் நீண்டகால ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
அப்பல்லோ மருத்துவமனையின் எலும்பியல் நிறுவனம், “மூட்டு எலும்பு முறிவுகளை நிர்வகிப்பதில் புதிய முன்னேற்றங்கள்” (“Recent Advances in Management of Periarticular Fractures”) என்ற தலைப்பில் தொடர் மருத்துவக் கல்வித் திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது (சிஎம்இ டாக்டர் ஏ நவலாடி சங்கர் (Dr A Navaladi Shankar) தலைமையிலான குழு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு இந்தத் துறையில் உள்ள அதி நவீன சிகிச்சை முறைகள் குறித்து எடுத்துரைத்தது. மேல் மற்றும் கீழ் முனைகளில் உள்ள சிக்கலான, பெரி ஆர்டிகுலர் எனப்படும் மூட்டு எலும்பு முறிவு நோயாளிகளைப் பராமரிப்பதில் வளர்ந்து வரும் மற்றும் அதிநவீன நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் இந்த கருத்தரங்கக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. குருத்தெலும்புகள் சம்பந்தப்பட்ட இந்த வகையான எலும்பு முறிவுகள், உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டும் என்று டாக்டர் நவலாடி சங்கர் வலியுறுத்தினார். “கவனிக்கப்படாவிட்டால், மூட்டு விறைப்பு ஏற்பட்டு மூட்டுவலிக்கு வழிவகுக்கும்”, என்று அவர் கூறினார்.
ஜெர்மனியைச் சேர்ந்த எலும்பியல் நிபுணர் டாக்டர் மைக்கேல் டேனர், ப்ராக்ஸிமல் ஹுமரஸ், டிஸ்டல் ஹுமரஸ், டிஸ்டல் ரேடியஸ், முழங்கால் மற்றும் டிஸ்டல் டிபியா ஆகியவற்றில் மூட்டு (பெரி ஆர்டிகுலர்) எலும்பு முறிவு சிகிச்சைகளில் சிறந்த விளைவுகளைப் பெறுவதற்கான வழிகளை எடுத்துரைத்தார். தற்போதைய அதிர்ச்சி, காயங்கள் (டிராமா) சிகிச்சையில் சிக்கலான தலைப்புகள், சொற்பொழிவுகள், நேரடி அனுபவ ஆய்வுகள், குழு விவாதங்கள் மற்றும் பார்வையாளர்களின் கருத்துகள் ஆகிய அம்சங்கள் இந்த கருத்தரங்க விவாதத்தில் இடம்பெற்றன. எலும்பியல் சிகிச்சைத் துறையில் அப்பல்லோவின் நடைமுறைகள் மேற்கத்திய நாடுகளில் உள்ள சிறந்த மருத்துவமனைகளுக்கு இணையாக. உலகத் தரம் வாய்ந்ததாக உள்ளது என டாக்டர் மைக்கேல் டேனர் ஒப்புக் கொண்டார்.
எலும்பியல் சிகிச்சையில் அப்பல்லோ எலும்பியல் நிறுவனம் (The Apollo Institutes of Orthopaedics), 35 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னோடியாக சிறந்து விளங்குகிறது. இது இந்தியாவில் இந்தத் துறையில் புதுமைக் கண்டுபிடிப்புகளில் முன்னோடியாக உள்ளது. தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் பொதுவான எலும்பியல் பிரச்சினைகள் குறித்த நடைமுறைகள் அடிப்படையிலான விவாதமாக சிஎம்இ (CME) எனப்படும் தொடர் மருத்துவக் கல்வித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிபுணர்களின் நடைமுறை அனுபவம் மற்றும் இந்த விஷயத்தில் தற்போதைய சான்றுகள் ஆகியவை கொண்ட அறிவுப் பூர்வமான கலவையின் மூலம், பார்வையாளர்களுக்கு அனைத்து தலைப்புகளிலும் முழுமையான, சமச்சீரான தகவல்கள் இந்தத் திட்டத்தில் வழங்கப்படுகின்றன. சிகிச்சை விவரங்கள் அடிப்படையிலான தகவல் தொடர்பு விளக்க நடைமுறையானது, செயல் முறை அடிப்படையில் குறிப்புகளை வழங்குவதோடு கேள்விகளுக்கு திறம்பட பதிலளிக்கவும் உதவுகிறது.