இந்திய பங்குச் சந்தைகள் நேற்றைய வர்த்தகத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. கரோனா வைரஸ், உலக சந்தையின் வீழ்ச்சி, கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்ச, இந்தியாவில் நிலவும் மந்தமான பொருளாதார சூழல் மற்றும் வங்கிகளின் கடன் பிரச்சினைகளினால் முதலீட்டாளர்கள் பீதியில் உள்ளனர். கடந்த சில தினங்களாக பங்குச்சந்தைகள் இறங்கு முகத்தில் உள்ளன.
மும்பை பங்குச் சந்தையின், சென்செக்ஸ் குறியீடு வர்த்தகத்தின் ஆரம்பத்தில் 36,950.20ல் தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே, இதுவரை இல்லாத வகையில், 2,467.44 புள்ளிகள் சரிந்து 35,109.18ஐ தொட்டது. வர்த்தகத்தின் முடிவில், 1941.67 புள்ளிகள் / 5.17% சரிந்து, 35634.95 புள்ளிகளில் முடிவடைந்தது.
தேசிய பங்குச் சந்தையின், நிப்டி குறியீடு, 538 புள்ளிகள் குறைந்து 10451.45 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே 10294.45 புள்ளிகள் வரை கீழே சென்ற நிப்டி 10751.55 என்ற உச்சத்தையும் தொட்டது. நிப்டி குறியீட்டில் உள்ள 50 பங்குகளில், 46 பங்குகளின் விழா குறைந்தது, 4 பங்குகளின் விலை உயர்ந்தது. யெஸ் வங்கியின் பங்குகள் 32.20% உயர்ந்து ரூ. 21.35ல் முடிவடைந்தது.