கர்நாடகா வங்கி அதன் 849வது கிளையை வர்தமன் நகர், நாக்பூரில் மற்றும் 850வது கிளையை எச் பி ஆர் லேஅவுட், பெங்களூருவில் மார்ச் 6, 2020ல் துவங்கியது.
ஹால்டிராம்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனர் ஸ்ரீ. ஷிவ்கிஷன் அகர்வால் அவர்கள் நாக்பூர் கிளையை துவங்கி வைத்தார். சர்வஸ்ரீ சந்திரசேகர் ராவ் பி – பொது மேலாளர், சதீஷா ஷெட்டி – டி ஜி எம் – மும்பை பிராந்திய அலுவலகம், விக்னேஷா – கிளை மேலாளர், மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஸ்ரீ. நீதிபதி எச் எஸ் கெம்பண்ணா, கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வங்கியின் 850வது கிளையை எச் பி ஆர் லேஅவுட், பெங்களூருவில் துணர்வாகி வைத்தார். ஸ்ரீ. ராம்மோகன் ராவ் பெல்லே – வங்கியின் இயக்குனர், ஸ்ரீ. கோகுல்தாஸ் பாய் – தலைமை வணிக அதிகாரி, ஸ்ரீ. ராஜா பி எஸ் – டி ஜி எம், அதன் ஸ்ரீமதி. வித்யாலஷ்மி ஆர் – ஏ ஜி எம் – பெங்களூரு பிராந்திய அலுவலகம், ராஜேந்திர – கிளை மேலாளர், மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.