ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தமிழ்நாட்டில் ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர் நிறுவனத்தை ரூ. 152.5 கோடிக்கு வாங்கியது.
ஸ்ரீ கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ்க்கு கோயம்பத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 29 கடைகள் உள்ளன. இக்கடைகளின் மொத்த அளவு 6 லட்சம் சதுர அடி. இக்கடைகளில், பழங்கள், காய்கறிகள், பால், மளிகை மற்றும் தினசரி தேவைக்கான பொருட்கள் விற்கப்படுகின்றன.
இந்த முதலீடு ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் தமிழக வியாபாரத்தை விரிவாக்கம் செய்து மேலும் வலுப்படுத்தும்.