ஸ்ட்ரைட்ஸ் பார்மா சயின்சஸ் நிறுவனம், அதன் துணை நிறுவனம் ஸ்ட்ரைட்ஸ் பார்மா க்ளோபல் சிங்கப்பூர் வாயிலாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (USFDA) இருந்து டெட்ராசைக்ளின் ஹைட்ரோகுளோரைடு கேப்ஸுல்ஸ்களுக்கு ஒப்புதல் பெற்றுள்ளது.
அமெரிக்க சந்தையில் டெட்ராசைக்ளின் ஹைட்ரோகுளோரைடு கேப்ஸுல்ஸுக்கு $16 மில்லியன் வணிகத்திறன் உள்ளது. இந்த மருந்து நிறுவனத்தின் பெங்களூரு ஆலையில் தயாரிக்கப்படும். இந்த மருந்தை ஸ்ட்ரைட்ஸ் பார்மா இன்க் நிறுவனம் அமெரிக்க சந்தையில் விற்கும்.
டெட்ராசைக்ளின் ஹைட்ரோகுளோரைடு கேப்ஸுல்ஸ் ஒரு நுண்ணுயிர்க்கொல்லி. இது பல்வேறு நுண்ணுயிர் தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்து ஆகும்.