லார்சன் அன்ட் டூப்ரோவின் கட்டுமான பிரிவு அதன் நீர் மற்றும் கழிவுப்பொருள் சுத்திகரிப்பு வணிகப்பிரிவில் புது வேலைக்கான உத்தரவை ஓமன் நாட்டில் இருந்து பெற்றுள்ளது. இது ஒரு நீர் உள்கட்டமைப்பு திட்டத்திற்கான வடிவமைப்பு மற்றும் அதை செய்து முடிப்பதற்கான வேலை ஆகும்.
இந்த திட்டத்தின் மதிப்பு ரூ. 1000 கோடிக்கு மேல் இருக்கும். இந்த வேலையை நிறுவனம் சர்வதேச போட்டி ஏலம் மூலம் வென்றுள்ளது.
இந்த வேலையின் நோக்கம் 173 கிமீ நீரை கொண்டு செல்வதற்காக குழாய்கள் பதிப்பு மற்றும் அதற்கு உண்டான கட்டுமான பணிகள் செய்வது, 18 ஆர்.சி.சி தண்ணீர் சேமிப்பு நீர்த்தேக்கங்கள், 5 உந்தி நிலையங்கள் மற்றும் இதர வேலைகள்.