வோடபோன் ஐடியா நிறுவனம் இந்த வாரத்திற்குள் அலைக்கற்றைக்கான ரூ. 3000 கோடி நிலுவை தொகை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகை நிறுவனம் முந்தைய ஏலங்களில் வாங்கிய அலைக்கற்றைக்கான விடுபட்ட தொகையாகும். இந்த தொகையை செலுத்துவதால் நிறுவனத்தின் வங்கி உத்திரவாதங்களை செயல்படுத்துவதை தடுக்க முயல்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் பிரச்னையில் கடைசி விசாரணை வருவதற்கு முன், வோடபோன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நிக் ரீட் மத்திய தொலை தொடர்பு மந்திரி திரு. ரவி ஷங்கர் பிரசாத் அவர்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.