பங்குச்சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பாரத ஸ்டேட் வங்கியின் கடன் அட்டை வழங்கும் நிறுவனத்தின் பங்கு வெளியீடு மார்ச் 2 முதல் முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்க துவங்குகிறது. இந்த நிறுவனத்தின் பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்.
இந்த வெளியீடு மூலம், நிறுவனம் ரூ. 9,000 கோடி வரை நிதி திரட்ட முடிவு செயதுள்ளது. இந்த வெளியீட்டில் நிறுவனம், ரூ. 500 கோடி புதிய பங்குகள் வாயிலாகவும், ஏற்கனவே இந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்து இருக்கும் முதலீட்டாளர்கள் விற்பனை மூலம் நிதி திரட்டுகின்றனர்.
இந்த நிறுவனம் கடன் அட்டை வழங்குவதில் 18.1% பங்குடன் (நவம்பர் 2019 கணக்குப்படி) இந்தியாவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்த நிறுவனத்தில், பாரத ஸ்டேட் வங்கி 74% பங்குகளையும், கார்லைல் குழுமம் 26% பங்குகளையும் வைத்துள்ளன. இந்த பங்கு வெளியீட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. மார்ச் 2 துவங்கும் பங்கு வெளியீடு, மார்ச் 5ல் முடிவடைகிறது.