இன்ஃபோசிஸ் நிறுவனம், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், ரூ. 3802 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது இது 5.26 சதவீத வளர்ச்சியாகும். அப்போது லாபம் ரூ. 3612 கோடியாக இருந்தது. எனினும் முந்தைய காலாண்டுடன் (ஜனவரி – மார்ச்) ஒப்பிடும்போது 6.76 சதவீதம் குறைந்துள்ளது.
இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 13.52 சதவீதம் அதிகரித்து (ரூ. 19854 கோடியில் இருந்து) ரூ. 22539 கோடியாக உயர்ந்துள்ளது. தனிப்பட்ட நிகர லாபம் 1.88 சதவீதம் உயர்ந்து ரூ. 3569 கோடியாக அதிகரித்து இருக்கிறது. மொத்த வருவாய் ரூ. 19844 கோடியாக உயர்ந்துள்ளது.