இண்டஸ்இண்டு வங்கி, ஏப்ரல்-ஜூன் 2019 காலாண்டில், ரூ. 1432.54 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ. 1035.77 கோடியாக இருந்தது. ஆக, நிகர லாபம் 38.30 சதவீதம் வளர்ச்சி கண்டிருக்கிறது.
இதே காலத்தில் இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ. 6961.37 கோடியாக உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ. 5068.15 கோடியாக இருந்தது. இதர வருவாய் (ரூ. 1301.60 கோடியில் இருந்து) ரூ. 1663.25 கோடியாக அதிகரித்துள்ளது.
முந்தைய காலாண்டுடன் (ஜனவரி-மார்ச் 2019) ஒப்பிடும்போது இவ்வங்கியின் மொத்த வாராக்கடன் (2.10 சதவீதத்தில் இருந்து) 2.15 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே சமயம் நிகர வாராக்கடன் (1.21 சதவீதத்தில் இருந்து) 1.23 சதவீதமாக உயர்ந்துள்ளது. வரிகள் நீங்கலாக ஒதுக்கீடு மற்றும் தற்காலிக செலவினம் ரூ. 430.62 கோடியாக குறைந்து இருக்கிறது.