இந்தியாவின் மிகப்பெரும் மூன்றாம் தரப்பு லாஜிஸ்டிக்ஸ் தீர்வுகளை வழங்கும் நிறுவனமான மஹிந்த்ரா லாஜிஸ்டிக்ஸின் [Mahindra Logistics (MLL)], புகழ்பெற்ற ‘லாஜிக்வெஸ்ட்’ [LOGIQUEST Season 3] போட்டியின் 3-வது சீசனை ஆரம்பமாகிறது. இந்த வருடம் ‘லாஜிஸ்க்வெஸ்ட்’, இந்தியா முழுவதுக்குமான ஒரு மாபெரும் போட்டியாக பல புதிய உற்சாகமூட்டும் அம்சங்களுடன் ஆரம்பமாக உள்ளது.
லாஜிக்வெஸ்ட் [LOGIQUEST] என்பது ஒரு ’வெள்ளை அறிவிக்கை’ [White Paper contest] போட்டியாகும், இப்போட்டி மஹிந்த்ரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தினால் [MLL] 2015 -ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில், இந்தியா முழுவதிலும் இருந்து புகழ்பெற்ற வணிக பள்ளிகளின் மாணவர்கள், இந்த போட்டியில் பங்கேற்று வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெறும் சீசன் -3 போட்டியில், மீண்டும் இந்தியாவின் புகழ்பெற்ற பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், முதன்மை இடங்களைப் பிடிக்க போட்டியிடுகின்றனர். இந்த போட்டியின் சிறப்பம்சமாக, தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு, மஹிந்த்ரா லாஜிஸ்டிக்ஸ்[MLL]- ன் அந்தந்த குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்கள், தங்கள் துறையில் பயிற்சி அளிப்பார்கள்.
மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. பிரோஜ்ஷா சர்க்காரி [Mr. Pirojshaw Sarkari, CEO – Mahindra Logistics] கூறுகையில், “திறமையுள்ள இளையதலைமுறை மாணவர்களை அடையாளம் காண்பதில் நாங்கள் எப்பொழுதும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். திறமையுள்ளவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கான சரியான தளத்தை வழங்கிவருகிறோம். லாஜிக்வெஸ்ட் தங்களுக்கு தொடர்புடைய வணிக சிக்கல்களுக்கான தீர்வுகளை காண்பதில் வெற்றிக்கண்டு வருகிறது. அதோடு சிக்கல்களுக்கான புதுமையான தீர்வுகளை மேற்கொள்வதற்கான தளத்தையும் அளிக்கிறது. மேலும் இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் மத்தியில் கடுமையான உழைப்பை உருவாக்கும் ஒரு ஆரோக்கியமான போட்டிக்கான கலாச்சாரத்தை உருவாக்குகிறது. இந்த ஆண்டு இன்னும் நிறைய மாணவர்கள் கலந்து கொள்வதற்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதனால் மிகவும் சுவாரஸ்யமான போட்டியை எதிர்பார்க்கிறோம். லாஜிக்வெஸ்ட்டில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்’’ என்றார்.
Logiquest – Season 3, பற்றி மேலும் விவரங்களுக்கும் இணையத்தில் பதிவு மேற்கொள்ளவும்: http://www.mahindralogistics.com/logiquest