லக்ஷ்மி விலாஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி எர்கோ உடன் புதிய கார்பொரேட் ஏஜென்ஸி கூட்டு ஒப்பந்தம்!

இந்தியாவின் முன்னணி தனியார் துறை பொது காப்பீட்டு நிறுவனமான ஹெச்டிஎஃப்சி எர்கோ பொது காப்பீடு நிறுவனம் [HDFC ERGO General Insurance Company] உடன்  லக்‌ஷ்மி விலாஸ் வங்கி புதிய கார்பொரேட் ஏஜென்ஸி கூட்டு ஒப்பந்தமொன்றை மேற்கொண்டிருக்கிறது, இந்த ஒப்பந்தம் மூலம் லக்‌ஷ்மி விலாஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு  ஹெச்டிஎஃப்சி எர்கோ [HDFC ERGO]-வின்  ஆயுள் காப்பீடு அல்லாத இதர காப்பீடு [non-life insurance] சிறப்புத் திட்டங்களை தனது பரவலான வலுவான கிளைகளின் நெட்வொர்க்கின் மூலம் வழங்கும்.

HDFC-ERGO-General-Insurance-Companyலக்‌ஷ்மி விலாஸ் வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி எர்கோ ஆகிய இரு நிறுவனங்களும் கார்பொரேட் ஏஜென்ஸி கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பதால்,  பல்வேறு பிரிவுகளிலான பொது காப்பீட்டுத் தயாரிப்புகளை வழங்க முடியும். இந்தியா முழுவதிலும் 18 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் தனது கிளைக்களுக்கான வலுவான நெட்வொர்க்கை கொண்டிருக்கும் லக்‌ஷ்மி விலாஸ் வங்கி தனது 560-க்கும் அதிகமான கிளைகள் மற்றும் 7 விரிவுப்படுத்தப்பட்ட கெளண்டர்களின் மூலம் இத்தயாரிப்புகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். தென்னிந்தியாவில் உறுதியான செயல்பாடுகளையும், விரிவான நெட்வொர்க்கையும் லக்‌ஷ்மி விலாஸ் வங்கி பெற்றிருப்பது, ஹெச்டிஎஃப்சி எர்கோவிற்கு இப்பிராந்தியத்தில் கூடுதல் வலு சேர்க்கும். அதேபோல் லக்‌ஷ்மி விலாஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களின் நிதி தேவைகளுக்கு முழுமையான தீர்களை ஒரே தளத்தில் வழங்க உதவும்.

லக்‌ஷ்மி விலாஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு, பி. முகர்ஜி [Mr. P Mukherjee, MD & CEO, Lakshmi Vilas Bank]  கூறுகையில், ‘’ஹெச்டிஎஃப்சி எர்கோ பொது காப்பீடு தீர்வுகளை வழங்குவதில்  எங்களது கூட்டு நிறுவனமாக கைக்கோர்த்திருப்பது எங்களுக்கு உற்சாகமளிக்கிறது. எங்களது வாடிக்கையாளர்களின் நிதி நலனை மேம்படுத்த வேண்டுமென்ற எங்களது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், முழு வரம்பிலான பொது காப்பீட்டுத் தீர்வுகளையும், தயாரிப்புகளையும் வழங்க இந்த ஒப்பந்தம் உதவும். மேலும் 360 டிகிரியிலான நிதியியல் சேவைகளை அளிப்பதில் ஒரு அங்கமாக. வாடிக்கையாளர்களுக்கு இப்பிரிவில் மிகச்சிறந்த காப்பீட்டுச் சேவை அனுபவத்தை அளிக்கும் என்ற பெரும் எதிர்ப்பார்பை பூர்த்தி செய்வோம்.” என்றார்.

ஹெச்டிஎஃப்சி எர்கோ பொது காப்பீடு நிறுவனத்தின்  நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை விநியோக அதிகாரி திரு. அனுஜ் தியாகி [Mr. Anuj Tyagi, Executive Director & Chief Distribution Officer, HDFC ERGO General Insurance] கூறுகையில், ‘’வங்கி நிறுவனங்களின் மூலம் பொது காப்பீட்டுத் தயாரிப்புகளையும் தீர்வுகளையும் வழங்குவது, வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மையும், சுலபமான அணுகுமுறையையும் உருவாக்குகிறது. லக்‌ஷ்மி விலாஸ் வங்கியுடனான புதிய ஒப்பந்தம், எங்களுக்கு ஒரு முக்கிய மைல்கல் ஆகும். மேலும் எங்களது ஒருங்கிணைந்த வளர்ச்சி யுக்திகளின் ஒரு பகுதியாகவும் அமைந்திருக்கிறது. சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலான வாடிக்கையாளர்களுக்கும் எங்களது அனைத்து தயாரிப்புகளும் சுலபமாக கிடைக்கவேண்டுமென்ற எங்களது தொடர் முயற்சியில் இது அடுத்தகட்டமாகவும். வங்கிகளுடன் இணைந்து செயல்படுவதற்கு ஒரு அருமையான வாய்ப்பாகவும் இருப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்’’ என்றார்.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *