மஹிந்த்ரா வேர்ல்ட் சிட்டி சென்னை [Mahindra World City, Chennai (MWC Chennai)], இன்று தனது ப்ரீமியம் குடியிருப்புத் திட்டமான ‘லேக் உட்ஸ்’ [‘Lakewoods’] குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ‘சில்வன் கவுண்ட்டி’ [Sylvan County], ’ஐரிஸ் கோர்ட்’ [Iris Court], ‘நோவா’ [Nova] மற்றும் ‘அக்வாலில்லி’ [Aqualily] ஆகிய நான்கு குடியிருப்புத் திட்டங்களுக்குப் பிறகு மஹிந்த்ரா வேர்ல்ட் சிட்டி சென்னை புதிதாக ஆரம்பிக்கும் ஐந்தாவது குடியிருப்புத் திட்டம் ‘லேக் உட்ஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முதல் மூன்று குடியிருப்புக்கள் முழுமையாக விற்பனையாகிவிட்டன. நான்காவது குடியிருப்பானது வில்லா, ஸ்கை வில்லா மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகள் என கலந்த ப்ரீமியம் குடியிருப்புத் திட்டமாகும். இத்திட்டதின் ஒவ்வொரு பிரிவு குடியிருப்புகளிலும், அவற்றின் பல்வேறு கட்ட வேலைகளுக்கு ஏற்ப குடியிருப்புகள் குடிப்புகுவதற்கு தயாரான நிலையிலும், அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கு நெருங்கிய நிலையிலும் இருக்கின்றன.
‘லேக் உட்ஸ்’ குடியிருப்புத் திட்டமானது 9 மிகப்பெரும் குடியிருப்பு தொகுப்புகளைக் கொண்டது. ஒவ்வொரு தொகுப்பும் 14 அடுக்கு தளங்களைக் கொண்ட பிரம்மாண்டமான குடியிருப்புகளாகும். 2 பெட்ரூம் மற்றும் ஹால், கிச்சன், 3 பெட்ரூம் மற்றும் ஹால், கிச்சன் உள்ள அபார்ட்மெண்ட்கள் மொத்தம் 747 ஆகும். இவை 9.33 ஏக்கர் அளவில் விசாலமாக கட்டப்பட உள்ளன. இத்திட்டத்தின் முதல் கட்ட வேலைகளை ஆரம்பிப்பதற்கான ஒப்புதலை, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ரெகுலட்டரி அதாரிட்டியிடமிருந்து [Tamil Nadu Real Estate Regulatory Authority (TN RERA)] பெற்றிருக்கிறது மஹிந்த்ரா வேர்ல்ட் சிட்டி சென்னை. முதல் கட்டமாக 3 தொகுப்புகளில் 249 குடியிருப்புகளில் இடம்பெறுகின்றன. அழகான குடியிருப்புத் திட்டமாக உருப்பெறவிருக்கும் லேக்ஸ் உட்ஸின் ஒரு பக்கம் கோலவை ஏரியும் [Kolavai Lake] மறுபக்கம் வெர்தாந் மலைகளும் [verdant hills] ரிசர்வ் காடும் இருக்கின்றன. இத்திட்டம் ஆறு வருடங்களில் மூன்று கட்டமாக கட்டப்பட்டு வருகிறது. லேக் உட்ஸ் குடியிருப்புகளில் நீச்சல் குளம், உள் அரங்க உடற்பயிற்சி மையம், பன்நோக்கு விசாலமான அறை, திறந்தவெளி பேட்மிண்டன் மைதானம், ஜாக்கிங் கோர்ட், உள் அரங்க விளையாட்டுகளுக்கான மையம், திறந்தவெளி மற்றும் லவுஞ்ச் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற உள்ளன. இன்றைய இயந்திரமயமான வாழ்க்கையில், நம் இயற்கையான வாழ்வை மீட்டு கண்டெடுக்க விரும்புபவர்களுக்காக ப்ரத்யேகமாக திட்டமிடப்பட்டு, வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தங்களது குடியிருப்புகளில் வசிப்பவர்களின் உடல்நலம் மற்றும் வாழ்வை மேம்பட வேண்டுமென்பதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த குடியிருப்புகளையே வழங்கவேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வரும் மஹிந்த்ரா லைஃப்ஸ்பேசஸ், இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் [Indian Green Building Council (IGBC)] ‘ப்ளாட்டினம்’ முன் சான்றிதழ் [pre-certified ‘Platinum’] பெற்ற திட்டமாகவே லேக் உட்ஸ் குடியிருப்பை தொடங்குகிறது. மேலும் இத்திட்டம் சிறப்புத் திறனாளிகளுக்கு ஏற்ற வசதிகள், விளக்குகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் இயங்கும் அம்சங்கள், இயற்கை முறையில் கழிவுகளை கையாளுதல், கழிவுகளை வகைகளின் படி பிரித்தெடுத்தல், பல்வேறு ஆற்றல் உருவாக்கம் மற்றும் நீர் சேமிப்பு வரையறைகள் என லேக் உட்ஸ் அதிநவீன குடியிருப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மஹிந்த்ரா லைஃப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அலுவலர் திருமதி. சங்கீதா பிரசாத் [Ms. Sangeeta Prasad, Chief Executive Officer, Mahindra Lifespace Developers Ltd] கூறுகையில், ‘’தனிநபர்கள் மட்டுமில்லாமல் தொழில்துறைகளும் பெரும் வளர்ச்சியடைய உதவும் வகையில், தனித்துவமான, நீடித்து நிலைக்கத்தக்க ஆற்றல் கொண்ட, நகர வளர்ச்சிக்கு உத்வேகமளிக்கும் திட்டங்களை மேற்கொள்ள வேண்டுமென்ற தொலைநோக்குப் பார்வையுடன் மஹிந்த்ரா வேர்ல்ட் சிட்டி சென்னை உருவாக்கப்பட்டது. வெற்றிகரமான எங்களது முயற்சிகளின் தொடர்ச்சியாக ‘லேக் உட்ஸ்’ குடியிருப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். இத்திட்டம் மஹிந்த்ரா வேர்ல்ட் சிட்டி சென்னையின் வளர்ச்சிப்பாதையில் மிகவும் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும்’’ என்றார்.
’’மஹிந்த்ரா வேர்ல்ட் சிட்டி சென்னையில், ’சூப்பர் சிட்டி சூப்பர் லைஃப்’ என்னும் அருமையான நகர வாழ்வை கொண்டாடும் வகையில் சமூக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். இன்று 2000-க்கும் அதிகமான குடும்பங்களுக்கு பிரம்மாண்டமான இல்லமாக மஹிந்த்ரா வேர்ல்ட் சிட்டி சென்னை திகழ்கிறது. நாளொன்றுக்கு இங்கு லட்சக்கணக்கானோர் தங்களது வர்த்தகம் மற்றும் சமூக செயல்பாடுகளுக்காகவும் வந்து செல்லும் அளவுக்கு முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. இது மஹிந்த்ரா வேர்ல்ட் சிட்டி சென்னையில் வசிப்பவர்கள் மற்றும் அதன் பங்குதாரர்களுக்கு எதிர்கால சமூக முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை ஊக்குவிக்கிறது’’ என்றார் மஹிந்த்ரா வேர்ல்ட் சிட்டி சென்னையின் வர்த்தகத் தலைவர் [குடியிருப்பு] திரு. பி. விஜயன் [Mr. P. Vijayan, Business Head (Residential), Mahindra World City, Chennai]
மஹிந்த்ரா வேர்ல்ட் சிட்டி சென்னை, 1500 ஏக்கர் பரப்பளவில் விசாலமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. பல்வகை பிரிவுகளிலான குடியிருப்பு மட்டும் 285 ஏக்கர் பரப்பளவில் சமூக, பொருளாதார, சில்லரை வர்த்தக அம்சங்களுடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ‘வாழ்வாதாரம், வாழ்க்கை மற்றும் வாழ்வு’ [‘Livelihood, Living and Life’] என்னும் தத்துவத்தின் அடிப்படையில் இந்த ஒருங்கிணைந்த நகரமானது, எதிர்கால தேவைகளையும், அவற்றை எதிர்கொள்ள அவசியமான அம்சங்களையும் உடைய தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளுக்கிடையே கூட்டு ஒப்பந்தங்களின் வாயிலாக ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. மஹிந்த்ரா வேர்ல்ட் சிட்டியில் வசிக்கும் மக்கள், கருத்தாக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் சமூக கட்டமைப்புகளை அந்நகருக்குள்ளாக மிக எளிதில் பயன்படுத்தமுடியும். உணவகங்களுடன் கூடிய வர்த்தக மையம், பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள், வங்கிகள் மற்றும் ஏடிஎம், ’மஹிந்த்ரா வேர்ல்ட் ஸ்கூல்’, மருத்துவமனை, வர்த்தக மையம், சில்லறை விற்பனை நிலையங்கள், உணவு வளாகம், குழந்தை பராமாரிப்பு மையம், மஹிந்த்ரா வேர்ல்ட் சிட்டி க்ளப் மற்றும் பிஸ்னெஸ் ஹோட்டல் என அனைத்துவிதமான செளகரியங்களும் மஹிந்த்ரா வேர்ல்ட் சிட்டி சென்னை நகருக்குள்ளாகவே அமைந்திருக்கின்றன. மேலும் வருடம் முழுவதும் பல்வேறு கலாச்சார அடிப்படையிலான நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிய்கள், கலந்துரையாடல் கூட்டங்கள் இங்கு நடைப்பெற்று வருகின்றன. இவற்றில் மஹிந்த்ரா வேர்ல்ட் சிட்டி ரன், சிட்டி வருடாந்திர கொண்டாட்டம், மஹிந்த்ரா வேர்ல்ட் சிட்டி வினாடி-வினா போட்டியான ‘மைண்ட் க்வஸ்ட்’ ஆகியன இதில் முக்கியமானவையாகும். சமூக முன்னேற்றத்திற்கு உதவ வேண்டுமென்ற நோக்கத்தில், இங்கு வசிக்கும் உள்ளூர் மக்கள் தங்கள் பங்களிப்பை தொடர்ந்து அளித்து வருகிறார்கள்.
மஹிந்த்ரா வேர்ல்ட் சிட்டி சென்னை, ’க்ரீன் டவுன்ஷிப்’ சான்றிதழ் பெற்ற இந்தியாவின் முதல் ஐஜிபிசி கோல்ட் [ஸ்டேஜ்1] நகரமாகும். மேலும் இந்நகரம் கார்பொரேட் இந்திய நிறுவனங்களுக்கான முதல் எஸ்.இ.இசட் இயங்குதளமாகவும் திகழ்கிறது. மஹிந்த்ரா வேர்ல்ட் சிட்டி சென்னை, சுற்றுச்சூழலுக்கு உகந்த, நகரத்திற்குள்ளாகவும், நகரைச் சுற்றியும் அங்கு வசிப்பவர்கள் மற்றும் வருகைத்தரும் விருந்தினர்கள் சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த நகரம் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. மஹிந்த்ரா வேர்ல்ட் சிட்டி சென்னையில் அதிகரித்துவரும் குடியிருப்புவாசிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அங்குள்ள அலுவலகங்களுக்கு நடந்து செல்வதை ஊக்குவிக்கும் அம்சங்கள் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் இங்கு ஒட்டுமொத்த கார்பன் ஃபுட்ஃப்ரிண்ட் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதோடு, காசு மாசுப்படுதலும் கட்டுப்படுத்தப்படுகிறது.