ஹெச் டி எப் சி அறங்காவலர் நிறுவனம், ஹெச் டி எப் சி பரஸ்பர நிதி திட்டத்தின் அறங்காவலர்கள் நிதி திட்டங்களில் ஈவுத்தொகை அறிவித்து உள்ளனர்.
ஹெச் டி எப் சி சமச்சீர் நன்மை பரஸ்பர நிதி திட்டம் – வழக்கமான திட்டம் – ஈவுத்தொகை விருப்பம் (செலவின மற்றும் மறுமுதலீடு) மற்றும் ஹெச் டி எப் சி சமச்சீர் நன்மை பரஸ்பர நிதி திட்டம் – நேரடி திட்டம் – ஈவுத்தொகை விருப்பம் (செலவின மற்றும் மறுமுதலீடு) திட்டங்களில் ரூபாய் 0.310 ஈவுத்தொகையாக அறிவித்துள்ளனர். இந்த முதலீட்டு திட்டத்தின் ஒரு யூனிட்டிற்கான முக மதிப்பு ரூ. 10.
இந்த பரஸ்பர நிதி திட்டங்களில் அறிவித்துள்ள ஈவுத்தொகை, பதிவுத்தேதியான திங்கள்கிழமை, ஆகஸ்ட் 27, 2018ல் யூனிட் வைத்திருக்கும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் கிடைக்கும்.
ஹெச் டி எப் சி சமச்சீர் நன்மை பரஸ்பர நிதி திட்டம் – வழக்கமான திட்டம் – ஈவுத்தொகை விருப்பம் (செலவின மற்றும் மறுமுதலீடு) திட்டத்தின் நிகர சொத்து மதிப்பு (NAV) ரூபாய் 31.179 (ஆகஸ்ட் 20, 2018).
ஹெச் டி எப் சி சமச்சீர் நன்மை பரஸ்பர நிதி திட்டம் – நேரடி திட்டம் – ஈவுத்தொகை விருப்பம் (செலவின மற்றும் மறுமுதலீடு) திட்டத்தின் நிகர சொத்து மதிப்பு (NAV) ரூபாய் 32.568 (ஆகஸ்ட் 20, 2018).
இந்த திட்டங்களின் நிகர சொத்து மதிப்பு (NAV) ஈவுத்தொகை கொடுத்தபிறகு அதற்கு ஏற்றார்போல் குறையும்.