டாடா பரஸ்பர நிதியின் முதலீட்டு மேலாளர்களான டாடா சொத்து மேலாண்மை நிறுவனம், ஒரு புதிய பரஸ்பர முதலீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதன் பெயர் டாடா மல்டிகாப் நிதி திட்டம் (Tata Multicap Fund).
இந்த புதிய பரஸ்பர நிதி திட்டம் முதலீட்டிற்காக ஏற்கனவே துவக்கப்பட்டுவிட்டது. இந்த பரஸ்பர நிதி திட்டம் பங்குகளின் சந்தை முதலாக்க கட்டுப்பாடு இல்லாமல் எல்லா பங்குகளிலும் முதலீடு செய்யலாம். இந்த நிதி திட்டம் நடுத்தர கால மற்றும் நீண்ட கால முறையில் வருமானம் உருவாக்க நோக்கத்தை கொண்டுள்ளது.
இது பல்வகைப்பட்ட பங்குகளை கொண்ட போர்ட்ஃபோலியோ உருவாக்க நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற திட்டம்.
சோனம் உதாசி இந்த பரஸ்பர நிதி திட்டத்தின் நிதி மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பங்குகள் ஆராய்ச்சியில் 19 வருட அனுபவம் உள்ளது. இவர் டாடா சொத்து மேலாண்மை நிறுவனத்தில் ஏப்ரல் 2016ல் இருந்து பல பங்குகள் பரஸ்பர நிதி திட்டங்களுக்கு நிதி மேலாளராக உள்ளார்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்ய கடைசி நாள் ஆகஸ்ட் 31, 2018.