கோட்ரேஜ் நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ‘கோட்ரேஜ் ப்ரொடெக்ட்‘ என்னும் புது கை கழுவும் சோப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
கோட்ரேஜ் நிறுவனம் இந்த சோப்பை சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் காக்கும் சந்தையில் நிலைநிறுத்தியுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் கை கழுவும் சோப்பு சந்தை 15% ஏறி இருக்கிறது. இந்த பொருளுக்கான சந்தை தற்போது ₹ 740 கோடிகளில் உள்ளது, இது ₹ 8000 கோடி மதிப்பு வரை ஏற வாய்ப்பு உள்ளது என்று கோட்ரேஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சோப்பு, சந்தையில் உள்ள மற்ற சோப்பை விட வித்தியாசமானது. இது பவுடர் (பொடி) வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பாட்டில் தண்ணீரில் இந்த பொடியை கலக்கி குலுக்கினாள் கை கழுவும் சோப்பு தயார். இதன் விலையும் மற்ற சோப்புகளைவிட நான்கில் ஒரு பங்கு தான்.