ஸ்ரீராம் குழுமம் ரூ. 10 கோடியை பிரதமர் நிதிக்கு வழங்கியுள்ளது. ஸ்ரீராம் குழுமம், கொரோனா தொற்றால் தற்பொழுது நிலவும் அவசர நிலை மற்றும் துன்ப நிலைமையினை கருத்தில் கொண்டு அறிவித்துள்ள இந்த பிரதமர் நிதியை முழு மனதுடன் ஆதரிக்கிறது. இக்குழுமம் ஏற்கனவே ரூ. 8 கோடி கொடுத்துள்ளது. மீதம் உள்ள ரூ. 2 கோடி இந்த வாரத்தில் கொடுக்கப்படும்.