நிதி சேவைகள் நிறுவனங்கள் கொண்ட ஹெச் டி எப் சி குழுமம் ரூ. 150 கோடி பிரதமர் நிதிக்கு வழங்க உள்ளது. இந்த நிதி இந்திய அரசாங்கத்தின் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக வழங்கப்படுகிறது.
இந்த நெருக்கடியான நேரத்தில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் செயல்பாடு, ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள், போலீஸ், மருத்துவம் மற்றும் சுகாதார ஊழியர்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. இவர்கள் கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க அயராது உழைக்கின்றனர். இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு இன்னும் வலுவான நாடக மாறுவோம் என்று இந்நிறுவனத்தின் தலைவர் திரு. தீபக் பாரேக் அவர்கள் தெரிவித்தார்.