ஐஷர் நிறுவனம் மார்ச் 2020ற்கான ராயல் என்பீல்ட் மோட்டார் சைக்கிள் விற்பனை விவரங்களை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் மார்ச் 2020ல் மொத்தமாக 35814 வாகனங்களை விற்றுள்ளது, இது மார்ச் 2019ல் 60831ஆக இருந்தது. மார்ச் 2020ன் விற்பனை சென்ற ஆண்டை விட 41% குறைந்துள்ளது.
2019-20 நிதி ஆண்டில் மொத்த விற்பனை 695947 ஆக இருந்தது. இது 2018-19 ஆண்டில் 826098ஆக இருந்தது.
மார்ச் 2020ல் இந்நிறுவனம் 3184 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது, இது மார்ச் 2019ல் 2397ஆக இருந்தது. இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட 33% அதிகரித்துள்ளது.
மார்ச் 2020ல் இந்நிறுவனம் 30372 350சிசி வரை என்ஜின் திறன் உள்ள மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது, இது மார்ச் 2019ல் 54870ஆக இருந்தது. இது சென்ற ஆண்டை விட 45% குறைவாகும்.
மார்ச் 2020ல் இந்நிறுவனம் 5442 350சிசிக்கும் அதிகமான என்ஜின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது, இது மார்ச் 2019ல் 5961ஆக இருந்தது. இது சென்ற ஆண்டை விட 9% குறைந்துள்ளது.