அசோக் லேலண்ட் விற்பனை மார்ச் 2020ல் 90% குறைந்துள்ளது

அசோக் லேலண்ட் நிறுவனம் மார்ச் 2020ற்கான வாகன விற்பனை விவரங்களை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் மார்ச் 2020ல் மொத்தமாக 2179 வாகனங்களை விற்றுள்ளது, இது மார்ச் 2019ல் 21535ஆக இருந்தது. மார்ச் 2020ன் விற்பனை சென்ற ஆண்டை விட 90% குறைந்துள்ளது.

உள்நாட்டு சந்தையில் இந்நிறுவனம் 1787 வாகனங்களை மார்ச் 2020ல் விற்றுள்ளது, இது சென்ற ஆண்டு மார்ச் 2019ல் விற்பனையான 20521ஐ விட 91% குறைவு.

Ashok Leyland - Heavy Commercial Vehicles - Bus - LCV - Sales Volume - March 2020

மார்ச் 2020ல் இந்நிறுவனம் சென்ற ஆண்டை விட 94% குறைவாக 348 இலகுரக வாகனங்களை விற்பனை செய்துள்ளது, இது மார்ச் 2019ல் 5501ஆக இருந்தது.

மார்ச் 2020ல் இந்நிறுவனம் 1831 நடுத்தர மற்றும் கனரக வாகனங்களை விற்றுள்ளது. இது மார்ச் 2019ல் 16034ஆக இருந்தது. சென்ற ஆண்டைவிட 89% குறைந்துள்ளது.

பேருந்துகள் விற்பனை மார்ச் 2020ல் 62% குறைந்து 913 ஆக இருந்தது. மார்ச் 2019ல் பேருந்துகள் விற்பனை 2414ஆக இருந்தது.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *