டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மார்ச் 2020ற்கான வாகன விற்பனை விவரங்களை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் மார்ச் 2020ல் மொத்தமாக 12924 வாகனங்களை விற்றுள்ளது, இது மார்ச் 2019ல் 74679ஆக இருந்தது. மார்ச் 2020ன் விற்பனை சென்ற ஆண்டை விட 82.69% குறைந்துள்ளது.
உள்நாட்டு சந்தையில் இந்நிறுவனம் 11012 வாகனங்களை மார்ச் 2020ல் விற்றுள்ளது, இது சென்ற ஆண்டு விற்பனையை விட 84% குறைவு. மார்ச் 2019ல் உள்நாட்டு வாகன விற்பனை 68727 ஆக இருந்தது.
உள்நாட்டு சந்தையில் இந்நிறுவனம் 5336 கனரக வாகனங்களை மார்ச் 2020ல் விற்றுள்ளது, இது சென்ற ஆண்டு விற்பனையை விட 90% குறைவு. மார்ச் 2019ல் உள்நாட்டு கனரக வாகன விற்பனை 50917 ஆக இருந்தது. கனரக வாகனங்களின் ஏற்றுமதி மார்ச் 2020ல் 68% குறைந்து 1787ஆக இருந்தது. இது மார்ச் 2019ல் 5619ஆக இருந்தது.
மார்ச் 2020ல் இந்நிறுவனம் 5676 பயணிகள் வாகனங்களை (Cars) விற்றுள்ளது, இது மார்ச் 2019ல் 17810ஆக இருந்தது. இந்நிறுவனத்தின் கார் விற்பனை சென்ற ஆண்டை விட 68% குறைந்துள்ளது.