எஸ்கார்ட்ஸ் வேளாண் இயந்திரங்கள் நிறுவனம் மார்ச் 2020ற்கான வாகன விற்பனை விவரங்களை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் மார்ச் 2020ல் மொத்தமாக 5444 வாகனங்களை விற்றுள்ளது, இது மார்ச் 2019ல் 11905ஆக இருந்தது. மார்ச் 2020ன் விற்பனை சென்ற ஆண்டை விட 54.3% குறைந்துள்ளது.
2019-20 நிதி ஆண்டில் மொத்த விற்பனை 86018 ஆக இருந்தது. இது 2018-19 ஆண்டில் 96412ஆக இருந்தது.
2019-20 நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் மொத்த விற்பனை சென்ற ஆண்டை விட 20% குறைந்து 20108 ஆக இருந்தது. இது 2018-19 ஆண்டில் 25136ஆக இருந்தது.
உள்நாட்டு சந்தையில் இந்நிறுவனம் 5228 வாகனங்களை மார்ச் 2020ல் விற்றுள்ளது, இது சென்ற ஆண்டு விற்பனையை விட 54.3% குறைந்தது. மார்ச் 2019ல் உள்நாட்டு வாகன விற்பனை 11431 ஆக இருந்தது.
மார்ச் 2020ல் இந்நிறுவனம் 216 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது, இது மார்ச் 2019ல் 474ஆக இருந்தது. இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட 54.4% குறைந்துள்ளது.