மஹிந்திரா வேளாண் உபகரணங்கள் நிறுவனம் மார்ச் 2020ற்கான வாகன விற்பனை விவரங்களை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் மார்ச் 2020ல் மொத்தமாக 13613 வாகனங்களை விற்றுள்ளது, இது மார்ச் 2019ல் 19688ஆக இருந்தது. மார்ச் 2020ன் விற்பனை சென்ற ஆண்டை விட 31% குறைந்துள்ளது.
2019-20 நிதி ஆண்டில் மொத்த விற்பனை 301915 ஆக இருந்தது. இது 2018-19 ஆண்டில் 330436ஆக இருந்தது.
மார்ச் 2020ல் இந்நிறுவனம் 195 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது, இது மார்ச் 2019ல் 1242ஆக இருந்தது. இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட 84% குறைந்துள்ளது.
உள்நாட்டு சந்தையில் இந்நிறுவனம் 13418 வாகனங்களை மார்ச் 2020ல் விற்றுள்ளது, இது சென்ற ஆண்டு விற்பனையை விட 27% குறைந்தது. மார்ச் 2019ல் உள்நாட்டு வாகன விற்பனை 18446 ஆக இருந்தது.