மாருதி சுசூகி நிறுவனம் மார்ச் 2020ற்கான வாகன விற்பனை விவரங்களை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் மார்ச் 2020ல் மொத்தமாக 83,792 வாகனங்களை விற்றுள்ளது, இது மார்ச் 2019ல் 158,076ஆக இருந்தது. மார்ச் 2020ன் விற்பனை சென்ற ஆண்டை விட 47% குறைந்துள்ளது.
2019-20 நிதி ஆண்டில் மொத்த விற்பனை 1,563,297 ஆக இருந்தது. இது 2018-19 ஆண்டில் 1,862,449ஆக இருந்தது.
கொரோனா தொற்றால் மார்ச் 22, 2020 முதல் நிறுவனத்தின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு சந்தையில் இந்நிறுவனம் 79,080 வாகனங்களை மார்ச் 2020ல் விற்றுள்ளது, இது சென்ற ஆண்டு விற்பனையை விட 46.4% குறைந்துள்ளது. மார்ச் 2019ல் வாகன விற்பனை 147,613 ஆக இருந்தது.
மார்ச் 2020ல் இந்நிறுவனம் 4,712 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது, இது மார்ச் 2019ல் 10,463ஆக இருந்தது. இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட 55% குறைந்துள்ளது.