டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மார்ச் 2020ற்கான வாகன விற்பனை விவரங்களை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் மார்ச் 2020ல் மொத்தமாக 144739 வாகனங்களை விற்றுள்ளது, இது மார்ச் 2019ல் 325323ஆக இருந்தது. மார்ச் 2020ன் விற்பனை சென்ற ஆண்டை விட 55.51% குறைந்துள்ளது.
மார்ச் 2020ல் இந்நிறுவனம் 50197 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது, இது மார்ச் 2019ல் 76405ஆக இருந்தது. இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட 34.30% குறைந்துள்ளது.
மார்ச் 2020ல் இந்நிறுவனம் 133988 இரண்டு சக்கர வாகனங்களை விற்றுள்ளது. இது மார்ச் 2019ல் 310885ஆக இருந்தது. சென்ற ஆண்டைவிட 56.90% குறைந்துள்ளது. உள்நாட்டு சந்தையில் 94103 இரண்டு சக்கர வாகனங்களை மார்ச் 2020ல் விற்றுள்ளது. இது மார்ச் 2019ல் 247694ஆக இருந்தது.
இரண்டு சக்கர வாகனங்களின் ஏற்றுமதி மார்ச் 2020ல் 39885ஆக இருந்தது. மார்ச் 2019ல் இரண்டு சக்கர வாகனங்களின் ஏற்றுமதி 63191 ஆக இருந்தது.
உந்து வாகன விற்பனை மார்ச் 2020ல் 66673ஆக இருந்தது. இது மார்ச் 2019ஐ விட 52.74% குறைந்துள்ளது. மார்ச் 2019ல் உந்து வாகன விற்பனை 141086ஆக இருந்தது.
ஸ்கூட்டர் விற்பனை மார்ச் 2020ல் 34191ஆக இருந்தது. இது மார்ச் 2019ஐ விட 65.28% குறைந்துள்ளது. மார்ச் 2019ல் ஸ்கூட்டர் விற்பனை 98477ஆக இருந்தது.
மார்ச் 2020ல் இந்நிறுவனம் 10751 மூன்று சக்கர வாகனங்களை விற்றுள்ளது. இது மார்ச் 2019ல் 14438ஆக இருந்தது. சென்ற ஆண்டைவிட 25.54% குறைந்துள்ளது.