மாக்மா பின்கார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் குழு அதன் துணை நிறுவனமான மாக்மா ஹௌசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ. 100 கோடி முதலீடு செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முதலீட்டிற்காக துணை நிறுவனத்தின் 17,727,353 பங்குகளை ரூ. 56.41 (முக மதிப்பு – ரூ. 10, உயர் மதிப்பு – ரூ. 46.41) ஒரு பங்கு என்ற விலையில் மொத்தமாக ரூ. 99,99,99,982.73ற்கு வாங்குகிறது. இந்த முதலீட்டிற்கு பிறகும் மாக்மா ஹௌசிங் பைனான்ஸ் நிறுவனம் முற்றிலும் சொந்தமான துணை நிறுவனமாக தொடர்ந்து செயல்படும்.