அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலாலும் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உலகில் உள்ள அதன் அனைத்து தொழிற்சாலைகளையும் – இந்தியா, கொலம்பியா மற்றும் பங்களாதேஷ் உட்பட தற்காலிகமாக மார்ச் 31, 2020 வரை மூடியது. நீம்ரானாவில் உள்ள உலகளாவிய பாகங்கள் மையம் (Global Parts Centre) உட்பட அனைத்து தொழிற்சாலைகளையும் மூடியது.
ஜெய்ப்பூரில் உள்ள நிறுவனத்தின் கண்டுபிடிப்பு மையம் (Centre of Innovation) உட்பட மற்ற இடங்களில் உள்ள ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி வேலை செய்வார்கள் என்று அறிவித்துள்ளது. தினப்படி அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மட்டுமே நிறுவனத்தில் இருந்து வேலை செய்வார்கள்.
நிறுவனத்தின் தலைவர், டாக்டர். முஞ்சால் நிலைமையை கூர்ந்து கவனித்து கொண்டுள்ளார். வீடியோ கான்பரன்சிங் மற்றும் தொலைபேசி கூட்டங்கள் வாயிலாக பாதுகாப்பு மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றி கண்காணித்து வருகிறார்.