கொரோனா வைரஸ் தொற்று பரவலால், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பெரும்பான்மையான சர்வதேச விமான சேவைகளை மார்ச் 21, 2020 முதல் ஏப்ரல் 30, 2020 வரை தற்காலிகமாக நிறுத்துகிறது. நிறுத்தப்பட்ட சேவைகள் எவ்வளவு விரைவாக நிலைமை சீரடைகிறதோ அவ்வளவு விரைவாக மீண்டும் தொடங்கும்.
ஸ்பைஸ்ஜெட்டின் கொல்கத்தா – டாக்கா விமான சேவை எப்பொழுதும் போல இயங்கும். சென்னை – கொழும்பு விமான சேவை மார்ச் 25, 2020 முதல் தொடங்கும். டெல்லி – துபாய் மற்றும் மும்பை – துபாய் விமான சேவைகள் ஏப்ரல் 16, 2020 முதல் தொடங்கும்.