பங்குச்சந்தையில் இன்று நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 330.87 புள்ளிகள் உயர்ந்து 38278.75 புள்ளிகளை தொட்டது. தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீடு 81 புள்ளிகள் உயர்ந்து 11551.75 புள்ளிகளை தொட்டது.
இன்றைய வர்த்தகத்தில் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்தின் பங்குகளின் விலை நல்ல முன்னேற்றம் கண்டது. தேசிய பங்குச்சந்தையில் 6.68% ஏறி ரூபாய் 1323.05ல் முடிந்தது. நிறுவனம் பங்குகளை சந்தையில் இருந்து திரும்ப வாங்க போவதாக அறிவித்தது இன்றைய விலை ஏற்றத்திற்கான காரணமாக கருதப்படுகிறது.
இன்றைய வர்த்தகத்தில் ஏற்றம் கண்ட மற்ற பங்குகள் – டாடா மோட்டார்ஸ் (+4.76%), எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (+3.65%), டாடா ஸ்டீல் (+3.46%), ஹின்டால்க்கோ (+3.14%), வேதாந்தா (+3%).
மென்பொருள் நிறுவனம் இன்போசிஸின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் இறக்கம் கண்டது. நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ராஜினாமா அறிவிப்பை தொடர்ந்து பங்குகளின் விலை வீழ்ச்சி அடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 2.95% இறங்கி ரூபாய் 1388.20ல் முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் வீழ்ச்சி அடைந்த மற்ற பங்குகள் – இந்தியா எரிவாயு ஆணையம் நிறுவனம் (-2.36%), டைடன் நிறுவனம் (-1.97%), ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் (-1.40%), லூபின் (-1.23%), மாருதி (-0.84%).