யெஸ் வங்கி டிசம்பர் 31, 2019ல் முடிந்த மூன்றாம் காலாண்டிற்கான நிதி நிலை முடிவுகளை அறிவித்துள்ளது. வங்கி டிசம்பர் 31, 2019ல் முடிந்த காலாண்டில் (Q3 FY2020) நிகர நஷ்டம் ரூ. 18,560 கோடி என அறிவித்துள்ளது.
யெஸ் வங்கி வராக்கடன்களுக்காக டிசம்பர் 31, 2019ல் முடிந்த காலாண்டில் 72.7% ஒதுக்கீடு செய்துள்ளது. இது செப்டம்பர் 30, 2019ல் முடிந்த காலாண்டில் 43.1% ஆக இருந்தது.
மொத்த செயல்படாத சொத்துக்கள் – ரூ. 40,709 கோடி / 18.87%
நிகர செயல்படாத சொத்துக்கள் – ரூ. 11,115 கோடி / 5.97%
நிகர வட்டி வருமானம் வராக்கடன்கள் ஒதுக்கீட்டினால் ரூ. 1065 கோடியாக குறைந்தது.
டிசம்பர் 31, 2019ல் முடிந்த காலாண்டில் (Q3 FY2020) நிகர வட்டி விகிதம் 1.4%
டிசம்பர் 31, 2019ல் முடிந்த காலாண்டில் வட்டி அல்லாத வருமானம் ரூ. 626 கோடியாக இருந்தது. சில்லறை வங்கி கட்டணம், டிஜிட்டல் வங்கி வருவாயினால் 8% உயர்ந்தது.
வங்கியின் வைப்பு நிதி ரூ. 1,65,755 கோடியாக . இது சென்ற ஆண்டை விட 26% குறைந்துள்ளது.
நடப்புக் கணக்கு சேமிப்பு கணக்கு விகிதம் 32.1%ஆக இருந்தது. இது செப்டம்பர் 30, 2019ல் முடிந்த காலாண்டில் 30.8% ஆக இருந்தது. நடப்புக் கணக்கு சேமிப்பு கணக்கு மற்றும் சில்லறை கால வாய்ப்பு விகிதம் 63%ஆக இருந்தது. இது செப்டம்பர் 30, 2019ல் முடிந்த காலாண்டில் 60.3% ஆக இருந்தது.
நிகர கடன்கள் சென்ற ஆண்டை விட 24% குறைந்து மற்றும் செப்டம்பர் 30, 2019ல் முடிந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது 17% குறைந்து ரூ. 1,86,099 கோடியாக இருந்தது. சில்லறை கடன்கள் சென்ற ஆண்டை விட 11% அதிகரித்து கடனில் டிசம்பர் 31, 2019ல் முடிந்த காலாண்டில் (Q3 FY2020) 22.2% ஆகவும் டிசம்பர் 31, 2018ல் முடிந்த காலாண்டில் (Q3 FY2019) 15.2% ஆக இருந்தது.