யெஸ் வங்கி புனரமைப்பு திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தில் வங்கி ரூ. 10,000 கோடி முதலீட்டிற்கான ஒப்புதல் கடிதங்களை முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றுள்ளது.
இதுவரை இதர வங்கிகளே முதலீட்டிற்கு ஒப்புதல் தந்துள்ளனர். அவை, பாரத ஸ்டேட் வங்கி, ஹெச் டி எப் சி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, தி பெடரல் வங்கி, பந்தன் வங்கி மற்றும் ஐ டி எப் சி பார்ஸ்ட் வங்கி.
யெஸ் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ. 1100 கோடியில் இருந்து ரூ. 6200 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்கியின் பங்குகள் 450 கோடியில் இருந்து 3000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வங்கியின் முன்னுரிமை பங்கு மூலதனம் ரூ. 200 கோடியாக உள்ளது.
முதலீட்டாளர் பெயர் (Name of Investor) | முதலீடு தொகை (ரூபாய்) (Subscription Amount in INR) | பங்குகள் (Number of Equity Shares Allotted) |
பாரத ஸ்டேட் வங்கி (SBI) | 60,50,00,00,000 | 605,00,00,000 |
ஹெச் டி எப் சி (HDFC) | 10,00,00,00,000 | 1,00,00,00,000 |
ஐ சி ஐ சி ஐ வங்கி (ICICI) | 10,00,00,00,000 | 1,00,00,00,000 |
ஆக்சிஸ் வங்கி (Axis Bank) | 6,00,00,00,000 | 60,00,00,000 |
கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Bank) | 5,00,00,00,000 | 50,00,00,000 |
தி பெடரல் வங்கி (Federal Bank) | 3,00,00,00,000 | 30,00,00,000 |
பந்தன் வங்கி (Bandhan Bank) | 3,00,00,00,000 | 30,00,00,000 |
ஐ டி எப் சி பார்ஸ்ட் வங்கி (IDFC First Bank) | 2,50,00,00,000 | 25,00,00,000 |
மொத்தம் (Total) | 100,00,00,00,000 | 1,000,00,00,000 |
யெஸ் வங்கி 1000 கோடி பங்குகளில், 605 கோடி பங்குகள் பாரத ஸ்டேட் வங்கிக்கு விலை ரூ. 10 (முகமதிப்பு – ரூ. 2, – உயர் மதிப்பு – ரூ. 8) என்ற வகையில் ரூ. 6050 கோடிக்கு விற்றுள்ளது. 395 கோடி பங்குகளை இதர வங்கிகளுக்கு அதே விலையில் விற்கிறது.
பாரத ஸ்டேட் வங்கி அதனுடைய யெஸ் வங்கியின் பங்குகளில் 26% கீழ் மூன்று ஆண்டுகளுக்கு குறைக்காது. மற்ற முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் பங்குகளில் 75% மூன்று ஆண்டுகளுக்கு விற்க முடியாது.