ஹெச் டி எப் சி நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு மார்ச் 13, 2020ல் நடந்த சந்திப்பில் ரூ. 1000 கோடி யெஸ் வங்கியில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. ஹெச் டி எப் சி நிறுவனம், யெஸ் வங்கியின் 100 கோடி பங்குகளை ரூ. 10ற்கு (ரூ. 2 முகமதிப்பு மற்றும் ரூ. 8 உயர்மதிப்பு) வாங்க உள்ளது.
இந்த முதலீட்டினால் ஹெச் டி எப் சி நிறுவனம், யெஸ் வங்கியில் 5% மேலாக பங்குகள் வைத்திருக்கும். இதில் 75% முதலீட்டிற்கு மூன்று ஆண்டுகள் பூட்டு காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.