டி வி எஸ் மோட்டார் கம்பெனியின் இயக்குநர்கள் குழு மார்ச் 10, 2020 அன்று 2வது இடைக்கால ஈவுத்தொகையாக ரூ. 1.40 அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் பங்குகளின் முகமதிப்பில் (ரூ. 1) 140% ஆகும். இந்நிறுவனம், ஈவுத்தொகை, ஈவுத்தொகை விநியோக வரி உட்பட ரூ. 80 கோடி விநியோகிக்கவுள்ளது.
இந்நிறுவனம் மார்ச் 18, 2020ஐ இடைக்கால ஈவுத்தொகைக்கான பதிவு தேதியாக அறிவித்துள்ளது. இந்த ஈவுத்தொகையை நிறுவனம் சனிக்கிழமை, மார்ச் 21, 2020 முதல் பங்குதாரர்களுக்கு வழங்கும்.