சுந்தரம் கிளேட்டன் நிறுவனம் இடைக்கால ஈவுத்தொகையாக ரூ. 31 அறிவித்துள்ளது

சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு மார்ச் 10, 2020 அன்று இடைக்கால ஈவுத்தொகையாக ரூ. 31 அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் பங்குகளின் முகமதிப்பில் (ரூ. 5) 620% ஆகும். இந்நிறுவனம், ஈவுத்தொகை, ஈவுத்தொகை விநியோக வரி உட்பட ரூ. 62.72 கோடி விநியோகிக்கவுள்ளது.

இந்நிறுவனம் மார்ச் 18, 2020ஐ இடைக்கால ஈவுத்தொகைக்கான பதிவு தேதியாக அறிவித்துள்ளது. இந்த ஈவுத்தொகையை நிறுவனம் சனிக்கிழமை, மார்ச் 21, 2020 முதல் பங்குதாரர்களுக்கு வழங்கும்.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *