சாஸ்கன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு மார்ச் 9, 2020 அன்று 2வது இடைக்கால ஈவுத்தொகையாக ரூ. 15 அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் பங்குகளின் முகமதிப்பில் (ரூ. 10) 150% ஆகும். இதை தவிர, இந்நிறுவனம் ரூ. 35 சிறப்பு ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் பங்குகளின் முகமதிப்பில் (ரூ. 10) 350% ஆகும்.
இந்நிறுவனம் புதன்கிழமை, மார்ச் 18, 2020ஐ இடைக்கால ஈவுத்தொகை மற்றும் சிறப்பு ஈவுத்தொகைக்கான பதிவு தேதியாக அறிவித்துள்ளது. இந்த ஈவுத்தொகைகள் செவ்வாய் கிழமை, மார்ச் 31, 2020ற்குள் பங்குதாரர்களுக்கு வழங்கப்படும்.