ஜம்போ பாக் நிறுவனம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெருவாயல் கிராமத்தில் வாடகை இடத்தில் இயங்கி வந்த ஆலைகளை மார்ச் 31, 2020ல் மூடவுள்ளது.
இந்த இடத்தில் இயங்கிவந்த ஆலைகள் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறிதளவே பங்களித்தன. இந்த ஆலைகளை மூடுவதால் நிறுவனத்திற்கு இழப்பு கிடையாது. இந்த ஆலையில் இருந்த இயந்திரங்கள் நிறுவனத்தின் மற்ற தொழிற்சாலைகளுக்கு மாற்றப்படும்.
இந்த இடத்தின் உரிமையாளர் வங்கியுடன் உள்ள கடன் தகராறினால் வாடகை ஒப்பந்தத்தை புதிப்பிக்கவில்லை. அவர் வங்கியிடம் வாங்கிய கடனையும் திருப்பி செலுத்தவில்லை. இதனால், வங்கி கடன் மீட்பு தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில் அந்த இடத்தை மின் ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது.