தகவல் தொழில்நுட்ப நிறுவனம் சயின்ட்(Cyient), திரு. கார்த்திகேயன் நடராஜன் அவர்களை தலைவர் மற்றும் முதன்மை நடவடிக்கை அதிகாரியாக (COO) நியமனம் செய்தது. இவருக்கு பொறியியல் சேவைகளில் 20 வருடங்கள் அனுபவம் உள்ளது.
இதற்கு முன், கார்த்திகேயன் நடராஜன் டெக் மஹிந்திரா நிறுவனத்தில் ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் வணிகத்தின் தலைவராக இருந்தார். நாஸ்க்காமின் (NASSCOM) பொறியியல் சேவைகள் மன்றத்தின் இணை தலைவராகவும் உள்ளார்.