மார்ச் 9, 2020 அன்று அமெரிக்க பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது. டவ் ஜோன்ஸ் குறியீடு கீழ் வரம்பான 7% தொட்டது. இது 1997ற்கு பிறகு முதல் முறையாக திங்கள்கிழமை வர்த்தகத்தில் தொட்டது. இதற்கு கரோனா வைரஸ், ஒரு உலகளாவிய தொற்றுநோயாக உருவெடுத்து அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது மட்டும் அல்லாமல், கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் கடன் பத்திரங்களின் வரவு (yield) குறைந்ததும் காரணங்களாகும்.
அமெரிக்க பங்குச்சந்தையின் டவ் ஜோன்ஸ் குறியீடு திங்கள்கிழமையின் வர்த்தகத்தின் முடிவில் 2013.76 புள்ளிகள் குறைந்து 23851.02ல் (-7.79%) முடிவுற்றது. டவ் ஜோன்ஸ் குறியீட்டில் விலை குறைந்த பங்குகள் – டவ் இன்க் – $30.53 (-$8.44 / -21.66%), செவ்ரான் கார்ப் – $80.67 (-$14.65 / -15.37%), கேட்டர்பில்லர் இன்க் – 104.07 (-$17.34 / -14.28%), ஜே பி மோர்கன் – $93.44 (-$14.64 / -13.55%), போயிங் கம்பெனி – $227.17 (-$35.16 / -13.40%), எக்ஸ்சன் மொபில் கார்ப் – $41.86 (-$5.83 / -12.22%), கோல்ட்மேன் சாக்ஸ் குரூப் இன்க் – $172.81 (-$20.04 / -10.39%), வால்ட் டிஸ்னி கோ. – $104.35 (-$10.92 / 9.47%) மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கோ. – $98.29 (-$9.95 / -9.19%).