எஸ் எம் எல் இசுசூ நிறுவனம் பிப்ரவரி 2020ற்கான விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் பிப்ரவரி 2020ல் மொத்தமாக 879 வாகனங்களை விற்றுள்ளது, இது பிப்ரவரி 2019ல் 1282ஆக இருந்தது. பிப்ரவரி 2020ன் விற்பனை சென்ற ஆண்டை விட 31.4% குறைந்துள்ளது.
இந்நிறுவனம் ஏப்ரல் 2019 முதல் பிப்ரவரி 2020 வரையிலான காலத்தில் 14.1% குறைவாக 10006 வாகனங்களை விற்றுள்ளது. இது ஏப்ரல் 2018 முதல் பிப்ரவரி 2019 வரையிலான காலத்தில் 11655ஆக இருந்தது.