டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பிப்ரவரி 2020ற்கான வாகன விற்பனை விவரங்களை அறிவித்துள்ளது. இந்நிறுவனம் பிப்ரவரி 2020ல் மொத்தமாக 253261 வாகனங்களை விற்றுள்ளது, இது பிப்ரவரி 2019ல் 299353ஆக இருந்தது. பிப்ரவரி 2020ன் விற்பனை சென்ற ஆண்டை விட 15.4% குறைந்துள்ளது.
பிப்ரவரி 2020ல் இந்நிறுவனம் 82877 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது, இது பிப்ரவரி 2019ல் 66570ஆக இருந்தது. இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சென்ற ஆண்டை விட 25% அதிகரித்துள்ளது.
பிப்ரவரி 2020ல் இந்நிறுவனம் 235891 இரண்டு சக்கர வாகனங்களை விற்றுள்ளது. இது பிப்ரவரி 2019ல் 285611ஆக இருந்தது. சென்ற ஆண்டைவிட 17.40% குறைந்துள்ளது. உள்நாட்டு சந்தையில் 169684 இரண்டு சக்கர வாகனங்களை பிப்ரவரி 2020ல் விற்றுள்ளது. இது பிப்ரவரி 2019ல் 231582ஆக இருந்தது.
இரண்டு சக்கர வாகனங்களின் ஏற்றுமதி பிப்ரவரி 2020ல் 23% 66207ஆக இருந்தது. பிப்ரவரி 2019ல் இரண்டு சக்கர வாகனங்களின் ஏற்றுமதி 54029 ஆக இருந்தது.
உந்து வாகன விற்பனை பிப்ரவரி 2020ல் 118514ஆக இருந்தது. இது பிப்ரவரி 2019ஐ விட 3.29% குறைந்துள்ளது. பிப்ரவரி 2019ல் உந்து வாகன விற்பனை 122551ஆக இருந்தது.
ஸ்கூட்டர் விற்பனை பிப்ரவரி 2020ல் 60633ஆக இருந்தது. இது பிப்ரவரி 2019ஐ விட 30.25% குறைந்துள்ளது. பிப்ரவரி 2019ல் ஸ்கூட்டர் விற்பனை 86935ஆக இருந்தது.
பிப்ரவரி 2020ல் இந்நிறுவனம் 17370 மூன்று சக்கர வாகனங்களை விற்றுள்ளது. இது பிப்ரவரி 2019ல் 13742ஆக இருந்தது. சென்ற ஆண்டைவிட 26% அதிகரித்துள்ளது.